தேர்தல் வாக்குறுதிகள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
August 29 , 2022 1089 days 474 0
தேர்தல் வாக்குறுதிகள் மீதான 2013 ஆம் ஆண்டு தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இது 2013 ஆம் ஆண்டில் எஸ். சுப்ரமணியம் பாலாஜி எதிர் தமிழ்நாடு அரசு என்ற வழக்கின் தீர்ப்பாகும்.
வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123வது பிரிவின் (ஊழல் நடைமுறைகள்) வரம்பிற்குள் வராது என்று உச்ச நீதிமன்றம் முன்பு கூறியது.
ஒரு தனிப்பட்ட வேட்பாளர் மட்டுமே ஒரு ஊழல் முறைகேட்டை மேற்கொள்ள முடியும் என்றும் அவரது கட்சி அவ்வாறு செய்ய முடியாது என்றும் இது கூறியுள்ளது.
இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வானது இந்தத் தீர்ப்பினை வழங்கியது.
தற்போது, நீதிமன்றத்தின் முந்தைய நிலையை மறுபரிசீலனை செய்வதற்காக மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வானது நியமிக்கப்பட உள்ளது.