TNPSC Thervupettagam

தேர்வு சீர்திருத்தங்களுக்கான பணிக்குழு

July 29 , 2026 16 hrs 0 min 39 0
  • தேர்வு முறையில் சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க உயர்மட்டப் பணிக்குழு அமைக்கப்படும் என இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
  • தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்த தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலைமையில் இப்பணிக்குழு செயல்படும்.
  • உளவுத்துறையின் (IB) முன்னாள் இயக்குநர் தபன் தேகா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) முன்னாள் தலைவர் எஸ். சோம்நாத் மற்றும் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) இயக்குநர் வி. காமகோடி ஆகியோர் இதன் உறுப்பினர்களாவர்.
  • முன்னாள் கல்வித்துறைச் செயலாளர் அனிதா கர்வால் மற்றும் தளவாட நிபுணர் அமிர்த லால் மீனா ஆகியோர் இதன் பிற உறுப்பினர்களாவர்.
  • தேர்வு முறைகேடுகளைத் தடுக்கவும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் கடுமையான வழிமுறைகளுடன் நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை அரசு அறிமுகப் படுத்த உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்