September 6 , 2024
318 days
503
புதிதாக தொடங்கப்பட்ட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் ( MKMK) திட்டத்தின் கீழான பசுந்தாள் உர விநியோகம் ஆனது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
வேளாண்மைத் துறையானது, 50% மானியத்தில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உரத்தினை விநியோகிக்கிறது.
தைஞ்சா (தக்கை பூண்டு) எனப்படும் இந்த உரமானது பொதுவாக வெளிச்சந்தையில் 100 ரூபாய் மதிப்பில் விற்கப்படுகிறது.
இது தொகுதி அளவிலான வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களில் 50 ரூபாய் மதிப்பில் கிடைக்கப் பெறுகிறது.
தைஞ்சா ஒரு ஏக்கருக்கு சுமார் எட்டு டன் வரை உயிர்ப் பொருளை வழங்கும் திறன் கொண்டது.
தைஞ்சா சிதைவடையும் போது , அது நெல் வளர்ப்புச் சூழலுக்கு மிகவும் நன்மை பயக்கும் பலவீனமான கரிம அமிலங்களை வெளியிடுகிறது.
இது வழங்கும் உயிர்ப் பொருளைத் தவிர , அதன் மூலம் உருவாகும் வேர் முடிச்சுகள் ஆனது வளிமண்டல நைட்ரஜனை நிலைக்கச் செய்கிறது.
Post Views:
503