வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் குழுவிற்கு உதவுவதற்காக ஜம்மு காஷ்மீர், அசாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை தொகுதி மறுவரையறை ஆணையத்தின் இணை உறுப்பினர்களாக மக்களவை நியமித்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசானது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் என்பவரது தலைமையில் தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைத்திருந்தது.
இது ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் மற்றும் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்ய இருக்கின்றது.
தொகுதி மறுவரையறை என்பது சட்டமன்றத்தைக் கொண்ட ஒரு மாநிலத்தின் நிலப்பரப்புத் தொகுதிகளின் வரம்புகள் (அ) எல்லைகளை வகுக்கும் ஒரு செயல்முறையாகும்.
இந்த ஆணையங்கள் 1952, 1963, 1973, மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் 4 முறை அமைக்கப் பட்டுள்ளன.