TNPSC Thervupettagam

தொகுதிகளின் மறுவரையறை

March 9 , 2020 1903 days 1028 0
  • முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அரசாங்கம் ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைத்துள்ளது.
  • இது ஜம்மு-காஷ்மீர் ஒன்றியம், வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் மக்களவை மற்றும்  சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்யும்.
  • தொகுதி மறுவரையறை என்பது ஒரு சட்டமன்ற அமைப்பைக் கொண்ட ஒரு மாநிலத்தில் பிராந்தியத் தொகுதிகளின் வரம்புகளை அல்லது எல்லைகளை நிர்ணயிக்கும் செயல்முறையாகும்.
  • 2002 ஆம் ஆண்டின் தொகுதி மறுவரையறைச் சட்டத்தின்படி அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் தொகுதி மறுவரையறை செய்யப்பட இருக்கின்றன.
  • இந்திய ஜனாதிபதியால் குறிப்பிடப்படும் தேதியில் அந்த ஆணையத்தின் உத்தரவுகள் செயல்படுத்தப் படும்.
  • இந்த உத்தரவுகளின் நகல்கள் மக்களவை அல்லது சம்பந்தப்பட்ட சட்டமன்றத்தின் முன் வைக்கப் படும்.
  • இதில் எந்த மாற்றங்களுக்கும் அனுமதியில்லை.
  • தொகுதி மறுவரையறைச் சட்டம், 2002 இன் படி, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மறுவரையறை ஆணையத்தில் மூன்று உறுப்பினர்கள் இருக்க வேண்டும்:
    • தலைவராக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி இருக்க வேண்டும்.
    • தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது அவர் பரிந்துரைத்த தேர்தல் ஆணையர் இருக்க வேண்டும்.
    • பதவி வழி உறுப்பினர்களாக மாநிலத் தேர்தல் ஆணையர் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்