தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது (DPIIT) 2021 ஆம் ஆண்டிற்கான தொடக்க நிறுவனங்களுக்கான தரவரிசைகளை அறிவித்துள்ளது.
மொத்தம் 24 மாநிலங்கள் மற்றும் 7 ஒன்றியப் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வானது, அவற்றைப் பின்வருகின்ற வகைகளில் தரவரிசைப்படுத்தியது.
சிறந்த முறையில் செயல்பட்ட நிறுவனங்கள்
முன்னணியிலுள்ள நிறுவனங்கள்
தலைமை
இலட்சியமிக்கத் தலைமைகள் மற்றும்
வளர்ந்து வரும் தொடக்க நிறுவனங்கள்
குஜராத் மாநிலம் தொடர்ந்து மூன்றாவது முறையாகச் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களாகும்.
தலைமை பிரிவில் பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகியவை அடங்கும்.
சத்தீஸ்கர், டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், புதுச்சேரி மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இலட்சியமுள்ளத் தலைமைகள் வகையின் கீழ் அடங்கும்.
ஆந்திரப் பிரதேசம், பீகார், மிசோரம் மற்றும் லடாக் ஆகியவை தொடக்க நிறுவனங்களுக்கான சூழல் அமைப்புகளை உருவாக்கும் வகையிலான மாநிலங்களில் அடங்கும்.