கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+) தரவுகளின் படி, 2025-26 ஆம் கல்வியாண்டில் 1-5 வகுப்புகளில் திரிபுரா பூஜ்ஜிய சதவீத இடை நிற்றல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
திரிபுராவின் தொடக்கப் பள்ளி இடைநிற்றல் விகிதமானது 2013-14 ஆம் ஆண்டில் 2.21 சதவீதத்திலிருந்து 2025-26 ஆம் ஆண்டில் 0 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் இடைநிலை அளவிலான இடைநிற்றல் விகிதமும் 25.51 சதவீதத்திலிருந்து 10.40 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நிபுண் (NIPUN) பாரத் திட்டம் மற்றும் சஹர்ஷா திரிபுரா உள்ளிட்ட முன்னெடுப்புகளுடன் இந்த முன்னேற்றத்தை அம்மாநிலம் இணைத்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து 2,048 தொடக்கப் பள்ளிகளிலும் பால்வாடிப் பள்ளிகளை (பாலர் வகுப்புகள்) அறிமுகப்படுத்த திரிபுரா திட்டமிட்டுள்ளது.