தொற்றா நோய்கள் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த ஐ.நா. பிரகடனம்
December 20 , 2025 18 days 73 0
தொற்றா நோய்கள் (NCDs) மற்றும் மன ஆரோக்கியத்தை கூட்டாக உள்ளடக்கிய முதல் உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.
இந்தப் பிரகடனம் 2030 ஆம் ஆண்டிற்கான தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, NCD ஆனது வாய்வழிச் சுகாதாரம், நுரையீரல் சுகாதாரம் மற்றும் குழந்தைப் பருவப் புற்றுநோய் போன்றவற்றையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்துகிறது.
காற்று மாசுபாடு, சுத்தமான சமையல், ஈய மாசுக் கலப்பு, மிகவும் அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் டிஜிட்டல் சுகாதாரப் பாதிப்புகள் போன்ற புதிய ஆபத்துக் காரணிகள் இதில் அடங்கும்.
புகையிலை, ஆரோக்கியமற்ற உணவுகள், டிரான்ஸ் கொழுப்புகள் (மாறுபக்க கொழுப்பு) மற்றும் மின்னணு சிகரெட்டுகள் ஆகியவற்றினை அரசாங்கத்தின் முழுப் பங்களிப்புடன் வலுவாகக் கட்டுப்படுத்த இது அழைப்பு விடுக்கிறது.
NCD ஆனது ஆண்டுதோறும் சுமார் 18 மில்லியன் அளவிற்கு முன்கூட்டிய மரணங்களை ஏற்படுத்துகின்றன என்பதையும், மனநலப் பாதிப்புகள் என்பவை உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கின்றன என்பதையும் இப்பிரகடனம் எடுத்துக் காட்டுகிறது.