தொற்றுநோய் ஆயத்த நிலைக்கான சர்வதேச தினம் – டிசம்பர் 27
December 30 , 2021 1326 days 473 0
எதிர்காலத்தில் ஏற்பட உள்ள பெருந்தொற்றுகளுக்கு மக்களைத் தயார்படுத்துவதும், அனைத்து நிலைகளிலான பெருந்தொற்றுகள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தச் செய்வதுமே இத்தினத்தின் ஒரு நோக்கமாகும்.
இந்தத் தினமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதன்முறையாக அனுசரிக்கப் பட்டது.
தொற்றுநோய்களுக்கு எதிரான தயார்நிலை, தடுப்பு மற்றும் அதற்கான கூட்டாண்மை ஆகியவற்றின் ஒரு முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதன் அவசியத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இதன் மூலம் வலியுறுத்தியுள்ளது.