TNPSC Thervupettagam

தொலைக்காட்சி மதிப்பீட்டுக் கொள்கை, 2026

August 2 , 2026 21 days 91 0
  • இது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
  • இது 2014 ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களுக்குப் பதிலாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • இக்கொள்கையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள் பின்வருமாறு:
    • நிகரச் சொத்து மதிப்புக்கான தகுதி அளவுகோலை ரூ. 20 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாகக் குறைத்தல்;
    • இணைக்கப்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் ஓடிடி தளங்களில் கிடைக்கும் தொலைக் காட்சி அலைவரிசைகள் உள்ளிட்ட பல தளங்களில் தொழில்நுட்பச் சார்பற்ற பார்வையாளர் அளவீடு;
    • அளவீடு செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை 50,000-லிருந்து 80,000-ஆக விரிவுபடுத்துவதன் மூலம் மாதிரி அளவை அதிகரித்தல்;
    • ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை நிறுவன ஆய்வுகளை நடத்துதல்;
    • பார்வையாளர் தரவுகளைக் கணக்கிடும்போது முகப்புப் பக்கத்தை விலக்குதல்;
    • ஆண்டுதோறும் சுதந்திரமான தணிக்கைகள்; மற்றும்
    • இணங்காதவர்களுக்கான தரப்படுத்தப்பட்ட அபராதக் கட்டமைப்பு.
  • தொலைக்காட்சி மதிப்பீட்டுக் கொள்கை, 2026, தொலைக்காட்சி மதிப்பீட்டுச் சேவைகளை வழங்கப் பதிவு செய்யப்படக் கூடிய முகமைகளின் எண்ணிக்கையில் எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்