தொலைதூரக் கிரகத்தில் நீர் இருப்பது குறித்த கண்டுபிடிப்பு
July 20 , 2022 1125 days 505 0
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது தொலைதூரத்தில் உள்ள ஒரு கிரகத்தில் நீரைக் கண்டறிய உதவும்.
இந்த தொலைநோக்கியானது மற்ற நட்சத்திரத் திரள்கள் முழுவதும் உள்ள கோள்களின் மீதான வளிமண்டலங்களின் வேதியியல் அமைப்பை மதிப்பிடுவதில் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்.
இது அகச்சிவப்பு வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு விண்வெளித் தொலைநோக்கியாகும்.
இது விண்வெளியில் உள்ள மிகப்பெரிய ஒளியியல் தொலைநோக்கி ஆகும்.
இதன் மேம்படுத்தப்பட்ட உணர்திறன் மற்றும் அகச்சிவப்பு தெளிவுத்திறன் ஆனது, மிகவும் பழைய, தொலைதூர அல்லது மங்கலானப் பொருட்களையும் கூட ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் காண்பதற்கு வழிவகை செய்கிறது.