TWA 7 எனப்படும் புதிதாக உருவான ஒரு இளம் நட்சத்திரத்தினைச் சுற்றி வரும் TWA 7b என்ற புதிய புறக்கோளினை நாசா கண்டறிந்துள்ளது.
ஒளிர்வு மிகு பொருட்களின் பொலிவினைக் குறைத்து ஒளிர்வு குறைந்த பொருட்களை படம் பிடித்தல் எனப்படும் நுட்பம் மூலம் வெப்ப சமிக்ஞைகளைப் பயன்படுத்தி இந்த கோள் ஆனது கண்டறியப்பட்டது.
TWA 7b ஆனது புவியிலிருந்து சுமார் 111 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
இது சனியைப் போன்ற நிறை கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு இது வியாழனின் நிறையி (சுமார் 100 பூமி நிறை) விட 0.3 மடங்கு அதிகமாகும்.
இந்த புறக் கோளானது, புவியானது சூரியனிலிருந்து உள்ள தொலைவினை விட, அதன் நட்சத்திரத்திலிருந்து தோராயமாக 50 மடங்கு தொலைவில் உள்ளது.
ஓர் இளம் மற்றும் குளிர்ந்த கோளான இதனை வழக்கமான முறைகளால் கண்டறிவது கடினமாகும்.