TNPSC Thervupettagam

தொலைதூரப் பெருங்கடல் பரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் 2025

September 27 , 2025 2 days 18 0
  • தொலைதூரப் பெருங்கடல் பரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் ஆனது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதியன்று சர்வதேச சட்டமாக மாற உள்ளது.
  • மொராக்கோ இந்த ஒப்பந்தத்தினை அங்கீகரித்த 60வது நாடாக மாறியது.
  • இந்த ஒப்பந்தமானது அதிகாரப்பூர்வமாகத் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் சார் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு குறித்த ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
  • இது உலக நாடுகளின் 200 கடல் மைல்கள் வரையிலான பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்களுக்கு அப்பால் அமைந்துள்ள தொலைதூரப் பெருங்கடல் பரப்புகளை உள்ளடக்கியது.
  • இந்த ஒப்பந்தமானது சர்வதேச பெருங்கடலில் கடல் சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்க அனுமதிக்கிறது.
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், கடல்சார் மரபணு வளப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான விதிகளை இது அமைக்கிறது.
  • இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் நாடுகள் மட்டுமே இப்பங்குதாரர்கள் மாநாட்டில் வாக்களிக்க முடியும்.
  • தற்போது வரை, 63 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளன என்பதோடு இது குறைந்தபட்சத் தேவையான 60 நாடுகள் என்ற எண்ணிக்கையை விட அதிகமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டு 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்