தொலைபேசி ஒட்டுக் கேட்பு குறித்து உயர்நீதிமன்ற கருத்து
July 5 , 2025 14 hrs 0 min 18 0
ஒரு குற்றத்தைக் கண்டறிவதற்கான தொலைபேசி ஒட்டுக் கேட்பு நடவடிக்கையானது தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுவதாக உயர் நீதிமதின்றம் கூறி உள்ளது.
1885 ஆம் ஆண்டின் இந்திய தந்திச் சட்டம் ஆனது தொலைபேசி ஒட்டுக் கேட்பை கட்டுப்படுத்துவதற்கான 'இட்சுமண ரேகை' என்ற வரம்பினை நிர்ணயித்தது.
நீதிமன்றத்தின் பங்கு இந்த வரம்பு மீறப்படுகிறதா இல்லையா என்பதை சரிபார்ப்பது மட்டுமே ஆகும்.
1604 ஆம் ஆண்டில் முன் வைக்கப்பட்ட தனியுரிமைக்கான உரிமையானது, 1996 ஆம் ஆண்டு PUCL வழக்கில் உச்ச நீதிமன்றத்தினால் 21வது சரத்தின் கீழ் அங்கீகரிக்கப் பட்டது.
உரிமையியல் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (PUCL) வழக்கின் தீர்ப்பை 2017 ஆம் ஆண்டு K.S. புட்டசாமி வழக்கில் அரசியலமைப்பு அமர்வு உறுதி செய்தது.
பொது அவசரநிலை அல்லது பொதுப் பாதுகாப்பு வழக்குகளில் மட்டுமே தொலைபேசி ஒட்டுக் கேட்பு அனுமதிக்கப்படுகிறது.
ஒரு சட்ட அடிப்படை இல்லாததால் இலஞ்ச வழக்கில் அளிக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டு தொலைபேசி ஒட்டுக் கேட்பு உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.