"Revitalising Apprenticeship Ecosystem: Insights, Challenges, Recommendations and Best Practices" என்ற தலைப்பில் நிதி ஆயோக் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கை இந்தியாவின் தொழிற்பயிற்சி முறையின் விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது மற்றும் அதை செயல்படுத்துவதில் உள்ள முக்கிய சவால்களை அடையாளம் காட்டுகிறது.
இது தெளிவான செயல் திட்டம், ஒதுக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் அளவிடக்கூடிய செயல்திறன் குறிகாட்டிகளுடன் சுமார் 20 செயல்முறை சார்ந்தப் பரிந்துரைகளை வழங்குகிறது.
இந்தப் பரிந்துரைகள் கொள்கை மற்றும் முறையான சீர்திருத்தங்கள், கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை வலுப்படுத்தல், மாநில மற்றும் மாவட்ட அளவிலான தலையீடுகள், தொழில் ஈடுபாடு மற்றும் பயிற்சியாளர் ஆதரவு வழிமுறைகள் ஆகிய ஐந்து தூண்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
இது ஒரு பொதுவான டிஜிட்டல் தளம், ஒரு பயிற்சி ஈடுபாட்டுக் குறியீடு, வலுவான மாவட்ட திறன் குழுக்கள் மற்றும் தொகுதி அடிப்படையிலான மாதிரிகள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) அதிக பங்கேற்பை முன்மொழிகிறது.