தொழிலாளர் சட்டம் தொடர்பான பின்வரும் மூன்று மசோதாக்களைத் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த விதிமுறை,
தொழில்துறை உறவுகள் விதிமுறை, மற்றும்
சமூகப் பாதுகாப்பு விதிமுறை.
இது தொழிற்சங்கங்கள், தொழில்துறை அமைப்புகளில் வேலைவாய்ப்பு நிலைமைகள் அல்லது தொழில்துறை முரண்களை விசாரணை செய்தல் மற்றும் அவற்றைத் தீர்த்து வைத்தல் தொடர்பான சட்டங்களைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம், 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள் நான்கு பரந்த குறியீடுகளாக குறியிடப் பட்டுள்ளன (ஊதியங்கள் குறித்த முதல் குறியீடு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது).
இது வணிகம் மேற்கொள்வதை எளிதாக்குகிறது மற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்குமான ஒரு சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது.