தொழிலாளர் சந்தையில் பாலின இடைவெளி குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கை
October 29 , 2020 1743 days 566 0
“உலகின் பெண்கள் : போக்குகள் மற்றும் புள்ளியியல் தகவல்கள்” என்று தலைப்பு கொண்ட இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் – டெசா (UN DESA) அமைப்பினால் வெளியிடப் பட்டு உள்ளது.
இந்த அறிக்கையின் படி, உலகம் முழுவதும் பாலினச் சமத்துவமானது இன்னமும் எட்டப் படாத ஒரு இலக்காக உள்ளது. எந்தவொரு நாடும் இதனை இன்னும் அடைய வில்லை.
இந்த அறிக்கையானது 1995 ஆம் ஆண்டில் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான தளம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, கடந்த 25 ஆண்டுகளாக பெண்களின் உலகளாவிய நிலை குறித்த ஒரு மெய்மை நிலைமையை அளிக்கின்றது.
தொழிலாளர் சந்தையில் பாலின இடைவெளியானது 1995 ஆம் ஆண்டில் இருந்த அதே நிலையில் இன்றும் தொடர்கின்றது.
சந்தையில் தொழிலாளர் சக்தியின் பங்கேற்பில் மிகப்பெரிய பாலின இடைவெளியானது முதன்மையான பணியாற்றும் வயதில் (24-54) காணப் படுகின்றது.
இந்தியாவில், தொழிலாளர் சந்தையில் ஆண்-பெண் தொழிலாளர் சக்தியின் பங்கேற்பு விகிதமானது 50% என்ற விருப்ப இலக்கிற்கு மாறாக 2019 ஆம் ஆண்டில் 29.80 ஆக உள்ளது.