தொழிலாளர் வளம்-20 ஈடுபாட்டுக் குழுவின் தொடக்கக் கூட்டம்
April 7 , 2023 882 days 371 0
G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைப் பதவியின் ஒரு பகுதியாக இரண்டு நாட்கள் அளவிலான தொழிலாளர் வளம்-20 ஈடுபாட்டுக் குழுவின் ஒரு தொடக்கக் கூட்டமானது, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் அளவிலான இந்தக் கூட்டத்தின் இறுதி முடிவாக, இரண்டுக் கூட்டு அறிக்கைகளை அது ஏற்றுக் கொண்டது.
முதலாவது அறிக்கையானது, சமூகப் பாதுகாப்பை உலகமயமாக்குவதற்கான முதல் படியாக G20 அமைப்பின் நாடுகளிடையேச் சமூகப் பாதுகாப்பினைக் கையாளுதல் பற்றி காணப்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான அழைப்பினை விடுக்கிறது.
இரண்டாவது அறிக்கையானது, உலகத் தொழிலாளர் வளத்தில் நிலவும் பாலின இடைவெளியை நிவர்த்திச் செய்வதனை வலியுறுத்துகிறது.