தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு
March 6 , 2020 1996 days 694 0
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (Employees Provident Fund Organisation - EPFO) நடப்பு நிதியாண்டில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.50 சதவீதமாகக் குறைத்துள்ளது.
முன்னதாக இது 2018-19ல் 8.65 சதவீதமாக இருந்தது.
இந்த நடவடிக்கையானது 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டில் ஊதியம் பெறும் ஊழியர்கள் குறைந்த வருவாயைப் பெறுவார்கள் என்பதைக் குறிக்கின்றது.
EPFO
இந்தியாவில் அமைப்புசார் துறையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்காக கட்டாயப் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி திட்டமான ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீட்டுத் திட்டத்தை நிர்வகிப்பதற்காக மத்திய வாரியத்திற்கு EPFO உதவுகின்றது.
EPFO ஆனது இந்திய அரசாங்கத்தின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றது.