"உலக வங்கி" அதன் சமீபத்திய தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையானது 190 பொருளாதாரங்களில் வணிகச் சூழலை மதிப்பிடுவதற்கு ஒவ்வொரு பொருளாதாரத்திலும் 12 வணிக ஒழுங்குமுறைப் பகுதிகளில் விதிமுறைகளை அளவிடுகிறது.
வணிகம் செய்வதற்கு உகந்த உலகின் முதல் 5 சிறந்த இடங்கள்
நியூசிலாந்து (100 இல் 86.8 மதிப்பெண்களுடன்),
சிங்கப்பூர் (86.2)
ஹாங்காங் தன்னாட்சிப் பகுதி, சீனா (85.3)
டென்மார்க் (85.3)
கொரியக் குடியரசு (84)
இந்தியாவைப் பற்றிய தரவு
190 நாடுகளில் இந்தியா 63வது இடத்தில் உள்ளது.
இது 2018 ஆம் ஆண்டில் பெற்றிருந்த 77வது இடத்திற்கு எதிராக 14 இடங்கள் முன்னேறியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2014-19) இந்தியா 79 இடங்கள் என்ற அளவிற்கு தனது தரத்தை மேம்படுத்தியுள்ளது.
தெற்காசிய நாடுகளிடையே இந்தியா தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்தத் தரவரிசையில் “நொடித்தலுக்குத் தீர்வு காண்பது” என்ற பிரிவில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது (தரவரிசையில் 108வது இடத்தில் இருந்து 52வது இடத்திற்கு இடம் பெற்றுள்ளது).