தொழில் செய்வதற்கு உகந்ததான வருடாந்திர இந்திய அறிக்கை
November 30 , 2018 2602 days 857 0
ஐக்கிய இராச்சிய இந்திய வர்த்தக மன்றமானது (UKIBC - UK India Business Council) சமீபத்தில் தனது 4-வது “ஐக்கிய ராச்சியத்தின் கண்ணோட்டத்தில் தொழில் செய்வதற்கு உகந்ததான வருடாந்திர இந்திய அறிக்கை” என்பதை வெளியிட்டுள்ளது.
இது இந்தியாவில் ஐக்கிய இராச்சியத்தின் தொழிலகங்கள் செயல்படுவதற்கு ஊழல் ஒரு தடையாக உள்ளது என்ற பார்வை 2015-லிருந்து தற்போது பாதியாகக் குறைந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.
தற்போது 25% ஐக்கிய இராச்சியத்தின் தொழிலகங்கள் ஊழலை ஒரு தடையாக பாவிக்கின்றன. இது 2015-ல் 51% ஆக இருந்தது.
46% ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தக நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களுக்கு தங்களது முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளன.
மேலும் அவற்றுள் 25 சதவிகிதத்தினர் இந்தியாவின் கிழக்குப் பகுதியை நோக்கி இந்த புதிய முதலீடுகளை செய்வதில் திட்டமிட்டு இருக்கின்றனர்.
அவர்கள் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் புதிய வாய்ப்புகளை தேடுகின்றனர்.