தொழில் துறை உறவுகள் தொடர்பான தொழிலாளர் குறியீடு 2019
November 22 , 2019 2225 days 1297 0
2019 ஆம் ஆண்டின் தொழில் துறை உறவுகள் தொடர்பான தொழிலாளர் குறியீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எந்தவொரு கால அளவிற்கும் நிலையாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு கால ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை இது அனுமதிக்கின்றது.
நிர்ணயிக்கப்பட்ட கால வேலைவாய்ப்பிற்கான சட்டக் கட்டமைப்பை வழங்க இந்த மசோதா முன்மொழிகின்றது.
புதிய விதிகளின் கீழ், அதேப் பிரிவில் பணியாற்றும் வழக்கமான தொழிலாளர்கள் பெறும் சட்ட ரீதியான சமூகப் பாதுகாப்புச் சலுகைகளை நிர்ணயிக்கப்பட்ட பதவிக் காலத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பெற இருக்கின்றனர்.
100 தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வதற்கு அல்லது தொழிற்சாலைகளை மூடுவதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.