தொழில்துறை ஆராய்ச்சி ஈடுபாட்டு முன்னெடுப்பிற்கான நிதி
July 4 , 2021 1498 days 511 0
அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமானது இன்டெல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து இம்மாதிரியான முதல் வகையிலான ஆராய்ச்சி முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இது “தொழில்துறை ஆராய்ச்சி ஈடுபாட்டிற்கான நிதி” (Fund for Industrial Research Engagement – FIRE) எனப்படும்.
இது இந்தியாவில் மேம்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த உள்ளார்ந்த ஆராய்ச்சிகளில் உதவும்.
இது உள்ளார்ந்த தொழில்நுட்பப் பகுதிகளில் (செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற) தொழில்துறை சார்ந்த வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்கு இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு சட்டரீதியிலான அமைப்பாகும்.
FIRE முன்னெடுப்பானது கூட்டு நிதி வழங்கீட்டு முறையுடன் கூடிய அரசு மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.