TNPSC Thervupettagam

தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் 10வது திருத்தம்

June 5 , 2026 57 days 163 0
  • தற்போதைய தொழில்துறைக் கட்டமைப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை சிறந்த முறையில் பிரதிபலிக்கும் வகையில், மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் (IIP) அடிப்படை ஆண்டை 2011–12 ஆம் ஆண்டில் இருந்து 2022–23 ஆக மாற்றியமைத்துள்ளது.
  • அகில இந்திய IIP-யின் 10-வது திருத்தம் இதுவாகும்; முதன்முதலில் 1937ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு IIP தொகுக்கப்பட்டது.
  • இந்தத் திருத்தம் IIP-க்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (TAC-IIP) கீழ் மேற்கொள்ளப் பட்டது.
  • குறியீட்டின் பரவலை மேம்படுத்துவதற்காக எரிவாயு விநியோகம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை மற்றும் கழிவு மேலாண்மை போன்ற புதிய துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பொருட்களின் தொகுப்பானது 839 பொருட்களிலிருந்து 1,042 தயாரிப்புகளாக (463 உருப்படி குழுக்கள்) விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • சுரங்க வகைப்பாடு எரிபொருள் கனிமங்கள், உலோக கனிமங்கள் (அரிய புவிக் கனிமங்கள் உட்பட) மற்றும் உலோகம் அல்லாத கனிமங்கள் (சிறிய கனிமங்கள் உட்பட) என விரிவுபடுத்தப்பட்டு, மேலும் விரிவான தொழில்துறைத் தரவுகளை வழங்குகிறது.
  • மின்சாரக் குறியீடு இப்போது புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் (சூரிய ஒளி, காற்று, நீர் மின்சாரம் போன்றவை) மற்றும் புதுப்பிக்க முடியாத ஆதாரங்கள் (நிலக்கரி, எரிவாயு, அணுசக்தி போன்றவை) மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனித் தனியாகக் கண்காணித்து, இந்தியாவின் ஆற்றல் உற்பத்தி கலவையின் தெளிவான படத்தை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்