தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் வளர்ச்சி - நவம்பர் 2025
January 3 , 2026 2 days 51 0
தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் (IIP) வளர்ச்சி 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவிற்கு 6.7% ஆக உயர்ந்தது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவான தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் வளர்ச்சி ஆனது கடைசியாக 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காணப்பட்ட 11.9% என்ற அளவினை விட அதிகமாக இருந்தது.
2025 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் IIP வளர்ச்சி சராசரியாக 3.6% ஆக இருந்தது என்பதோடுஇது 2025 ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டில் காணப்பட்ட 4.3% வளர்ச்சியை விடக் குறைவு ஆகும்.
உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறையானது 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 12.1% ஆக வளர்ந்தது என்பதோடுஇது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு பதிவான மிக விரைவான வளர்ச்சியாகும்.
நீடித்து உழைக்கும் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் நீடித்து உழைக்காத நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகிய துறைகள் இரண்டும் முறையே 10.3% மற்றும் 7.3% என்ற வீதத்தில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் வளர்ச்சி அடைந்தன.