TNPSC Thervupettagam

தொழில்துறை உற்பத்தியின் வீழ்ச்சி

October 12 , 2019 2124 days 784 0
  • நாட்டின் தொழில் துறை உற்பத்தியானது ஏறக்குறைய ஏழு ஆண்டுகளில் மிக மிக வேகமாக சரிந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக மிக மோசமாக குறைந்துள்ளது.
  • முக்கியமான பொருள்களின் உற்பத்தி, மூலதனப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களின் துறைகள் ஆகியவற்றில் கடுமையான சரிவு ஏற்பட்டதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
  • அக்டோபர் 11 ஆம் தேதியன்று மத்தியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தொழில்துறை உற்பத்தி குறியீட்டுத் தரவுகளின்படி, இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியானது ஆகஸ்ட் மாதத்தில் (மாதத்தின் அடிப்படையில்) 1.1 சதவீதம் என குறைந்துள்ளது.
  • தொழில்துறை உற்பத்தி அல்லது தொழிற்சாலை உற்பத்தி என்பது நாட்டின் வணிகப் பரப்பில் பொருளாதார நடவடிக்கைகளை அளவிடுவதற்கான ஒரு மிக நெருக்கமான குறியீடாகும்.
  • இதன் அடிப்படை ஆண்டு 2011-12 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்