தொழில்துறையில் பெண்களுக்கான சர்வதேச தினம் 2026 - ஏப்ரல் 21
April 30 , 2026 37 days 103 0
தொழில்துறையில் பெண்களுக்கான சர்வதேச தினத்தின் முதல் உலகளாவிய கொண்டாட்டமானது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று நடைபெற்றது.
சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பின் (UNIDO) 21-வது பொது மாநாட்டின் போது இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்காகத் தொழில்துறைகளில் பெண்களின் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Celebrating Women's Leadership in Industrial Development" என்பதாகும்.