கேரளப் புத்தாக்க நிறுவனத் திட்டம் மற்றும் சிஸ்கோ லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் புரோகிராம் அமைப்பு (CLAP - Cisco LaunchPad Accelerator Program) ஆகியவை இணைந்து முன்னோடியான தொழில்நுட்பத் தொழில்முனைவோர் தொடரை நடத்த உள்ளது.
இந்தியத் தொழில்நுட்பத் தொழில்முனைவோர் தொடர் ஆனது கேரளாவில் உள்ள கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இது நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி அன்று முடிவடையும்.
இந்த முன்முயற்சியானது புதிய காலச் சவால்களைத் தீர்ப்பதற்கு வேண்டி புதிய நிறுவனங்களைச் செயல்படுத்தும் வகையில் புதுமை மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு தளத்தை வழங்கும்.