தொழில்முறைப் படிப்புகளில் மாநில அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு
August 28 , 2021 1479 days 1022 0
மாநில அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு “முன்னுரிமை அடிப்படையில்” 7.5% இட ஒதுக்கீட்டினை வழங்குவதற்கான ஒரு மசோதாவினை தமிழக சட்டசபை ஏற்றுக் கொண்டுள்ளது.
இது பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் மற்றும் அரசுக் கல்லூரிகளில் அளிக்கப்படும் பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் மற்றும் இதர தொழில்முறைப் படிப்புகளில் இளங்கலைப் பட்டப் படிப்பிற்கான சேர்க்கையில் செயல்படுத்தப்படும்.
இந்த இட ஒதுக்கீட்டினைப் பெற மாணாக்கர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழகத்திலுள்ள மாநில அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்றிருக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் இடையே ஒரு உண்மையான சமத்துவ நிலையைக் கொண்டு வருவதற்காக வேண்டி ஓர் உறுதிபாட்டு நடவடிக்கையினை மேற்கொள்ள இந்த மசோதா முயல்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆகியோரிடையே “நடைமுறையில் சமத்துவமின்மை” நிலவி வருவது நீதிபதி D. முருகேசன் குழு சமர்ப்பித்த ஒரு அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.