TNPSC Thervupettagam

தோடா மொழி பாதுகாப்பு

August 17 , 2025 3 days 60 0
  • குர்தாஸ் வாசமல்லி (66), வாய்வழியாக பதிவான பாரம்பரிய ஆவணங்கள் மற்றும் எழுத்தறிவு ஊக்குவிப்பு மூலம் தோடா மொழியைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்குத் தலைமை தாங்குகிறார்.
  • தோடா மொழி என்பது அதற்கென சொந்த எழுத்து வடிவங்கள் இல்லாத மற்றும் நீலகிரி மலைகளில் சில ஆயிரம் மக்களால் பேசப்படுகின்ற ஒரு பூர்வீக-தெற்கு திராவிட மொழியாகும்.
  • அழிந்து வரும் மொழிகளின் பாதுகாப்பு மற்றும் காப்புத் திட்டத்துடன் (SPPEL) இணைந்து, தமிழ் எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தி ஒரு தோடா அடித்தள நூல் ஒன்று உருவாக்கப்பட்டது.
  • அழிந்து வரும் இந்திய மொழிகளை ஆவணப்படுத்துவதற்காக கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் (CIIL) SPPEL திட்டத்தினை மேற் கொண்டுள்ளது.
  • CIIL ஆனது, தோடா போன்ற மொழிகளுக்கான டிஜிட்டல் காப்பகங்கள் மற்றும் அகராதிகளை உருவாக்குவதற்காக ஒலி-ஒளிக் கருவிகள் மற்றும் மொழியியல் மென்பொருளைப் பயன்படுத்துகிறது.
  • சஞ்சிகா வலைத்தளம் தோடா மொழி மாதிரிகள் மற்றும் ஒலிக் கோப்புகளைப் பொது அணுகலுக்காக வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்