வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழான, ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது (MIDH) தோட்டக்கலைப் பயிர்களுக்கான மூன்று புதிய சிறப்பு மையங்களை (CoEs) நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தச் சிறப்பு மையங்கள், தோட்டக்கலைத் துறையில் உள்ள சமீபத்தியத் தொழில் நுட்பங்களுக்கான செயல்விளக்க மற்றும் பயிற்சி மையங்களாக செயல்படும்.
இந்தச் சிறப்பு மையங்கள் ஆனது பாதுகாக்கப்பட்டப் பயிர் சாகுபடிக்காக பழங்கள் மற்றும் காய்கறி நாற்றுகளுக்கான நடவுப் பொருட்களின் மூல ஆதாரமாகவும் செயல் படுகின்ற நிலையில், அவை பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பம் மற்றும் அறிவுவாற்றல் பரிமாற்றம் ஆகியவற்றிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
கமலம் (டிராகன் பழம்) பழத்திற்கான சிறப்பு மையமானது, பெங்களூருவில் உள்ள ஹிரேஹள்ளியில் அமைந்துள்ள பரிசோதனை நிலையத்தில் நிறுவப்பட உள்ளது.
மாம்பழம் மற்றும் காய்கறிகளுக்கான சிறப்பு மையமானது, ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பனிக்கோயிலி எனுமிடத்தில் நிறுவப்பட உள்ளது.
காய்கறிகள் மற்றும் பூக்களுக்கான சிறப்பு மையமானது, கோவா மாநிலத்தில் உள்ள கோடார், கண்டேபர், போண்டா, தெற்கு கோவா ஆகிய இடங்களில் அமைந்த அரசு வேளாண் பண்ணைகளில் நிறுவப்பட உள்ளது.