தோட்டப் பயிர்கள் – 2020-21 ஆம் ஆண்டின் இறுதி மதிப்பீடுகள்
April 1 , 2022 1228 days 548 0
பல்வேறு தோட்டப் பயிர்களின் 2020-21 ஆம் ஆண்டின் இறுதி மதிப்பீடுகள் மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான முன்கூட்டிய மதிப்பீடுகள் குறித்தத் தகவல்களை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையானது வெளியிட்டுள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் சுமார் 14.13 மில்லியன் டன்களாக (4.4%) இருந்த மொத்த தோட்டப் பயிர்கள் உற்பத்தியானது 2020-21 ஆம் ஆண்டில் 334.60 மில்லியன் டன்களாக (மதிப்பிடப் பட்டது) உயர்ந்துள்ளது.
பழங்கள் உற்பத்தி : 102.48 மில்லியன் டன் (மதிப்பிடப்பட்டது), 2019-20 ஆம் ஆண்டில் இதன் அளவு 102.08 மில்லியன் டன்களாக இருந்தது.
2019-20 ஆம் ஆண்டில் 188.28 மில்லியன் டன்களாக இருந்த காய்கறி உற்பத்தியானது, 2020-21 ஆம் ஆண்டில் 6.5% உயர்ந்து 200.45 மில்லியன் டன்களாக (மதிப்பிடப் பட்டது) உள்ளது.
வெங்காய உற்பத்தி : 26.64 மில்லியன் டன், இது 2019 ஆம் ஆண்டில் 26.09 மில்லியன் டன்களாக இருந்தது.
2019-20 ஆம் ஆண்டின் உருளைக்கிழங்கு உற்பத்தியானது அந்த ஆண்டு அளவை விட 7.61 மில்லியன் டன்கள் உயர்ந்து 2020-21 ஆம் ஆண்டில் 56.17 மில்லியன் டன்களாக (மதிப்பிடப் பட்டுள்ளது) உயர்ந்துள்ளது.
தக்காளி உற்பத்தி : 21.18 மில்லியன் டன், இது 2019-20 ஆம் ஆண்டில், 20.55 மில்லியன் டன்களாக இருந்தது.
நறுமணம் மற்றும் மருத்துவப் பயிர்கள் : 2019-20 ஆம் ஆண்டில் 0.73 மில்லியன் டன்களாக இருந்த இதன் உற்பத்தி 2020-21 ஆம் ஆண்டில் 0.83 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் 16.12 மில்லியன் டன்களாக இருந்தத் தோட்டப் பயிர்கள் உற்பத்தி 2020-21 ஆம் ஆண்டில் 16.63 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
2019-20 ஆம் ஆண்டில், 10.14 மில்லியன் டன்களாக இருந்த மசாலாப் பொருட்களின் உற்பத்தியானது, 2020-21 ஆம் ஆண்டில் 9.7% உயர்ந்து 11.12 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
2020-21 (இறுதி மதிப்பு) ஆம் ஆண்டில் இருந்த மதிப்பை விட 0.4% உயர்ந்து 2021-22 ஆம் ஆண்டின் மொத்தத் தோட்டப்பயிர்கள் உற்பத்தியின் மதிப்பானது 333.3 மில்லியன் டன்கள் (மதிப்பீடு) என்ற அளவில் சுமார் 1.35 மில்லியன் டன்கள் உயர்ந்துள்ளது.