குஜராத்திலுள்ள ஹரப்பா காலத்துப் பெருநகரமான தோலாவீரா யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தற்போது குஜராத் மாநிலத்தில் 3 உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன.
அவை பாவகத் அருகே உள்ள சம்பானீர், பதானிலுள்ள ராணி கி வாவ் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அகமதாபாத் நகரம் ஆகியனவாகும்.
தோலாவீராவானது இந்தியாவின் 40வது உலகப் பாரம்பரியத் தளமாகும்.
தற்போது நடைபெற்றுவரும் யுனெஸ்கோவின் 44வது உலகப் பாரம்பரியத் தளக் குழுவின் சந்திப்பில் ஏற்கனவே தெலுங்கானாவிலுள்ள ராமப்பா / ருத்ரேஸ்வரா ஆலயத்திற்கு உலகப் பாரம்பரியத் தள அந்தஸ்து ஆனது வழங்கப்பட்டுள்ளது.
காகாதீய மன்னர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயமானது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.
உலகப் பாரம்பரியத் தளக் குழுவின் சந்திப்பானது சீனாவின் தலைமையில் அந்நாட்டின் புசூவோ நகரில் நடத்தப் பட்டது.