உலகப் பழங் குடியினர் தினத்தன்று ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் தேனீக் குடியிருப்புகளுடன் கூடிய பழங்குடியினர் அதிகம் வாழும் கிராமத்தில் தோல் சார்ந்த 50 கருவிகளையும் 350 தேனீப் பெட்டிகளையும் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (Khadi and Village Industry Commission - KVIC) விநியோகித்துள்ளது.
நிதி ஆயோக்கால் அடையாளம் காணப்பட்ட இந்தியாவின் இலட்சிய மாவட்டங்களில் சிரோஹி மாவட்டமும் ஒன்றாகும்.
மேலும் KVIC ஆனது உலகப் பழங்குடி தினத்தன்று பழங்குடியினர் அதிகம் வாழும் கிராமமான சந்தலாவிலிருந்து ‘தோல் திட்டம்’ என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், KVIC ஆனது நாடு முழுவதும் உள்ள தோல் கைவினைஞர்களுக்குத் தோல் சார்ந்த பொருள்களை வழங்க இருக்கின்றது.
உலகப் பூர்வகுடி மக்களின் சர்வதேச தினம் (அல்லது) உலகப் பழங்குடியினர் தினம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 09 அன்று கொண்டாடப்படுகின்றது.