கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தோல் மற்றும் எலும்பு தானம் படிப்படியாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் (டிரான்ஸ்டன்) கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் 16 தோல் தானம், 2023 ஆம் ஆண்டில் 23 மற்றும் 2024 ஆம் ஆண்டில் 77 என மொத்தம் 100 தோல் தானம் செய்யப் பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இதுவரை 36 தோல் தானம் பதிவு செய்யப் பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 50, 2023 ஆம் ஆண்டில் 57 மற்றும் 2024 ஆம் ஆண்டில் 111 எலும்பு தானம் செய்யப் பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டில் இதுவரை, 80 எலும்பு தானம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த உறுப்பு கொடையாளர்களின் மார்பு மற்றும் தொடைகளில் இருந்து தோல் பிரித்தெடுக்கப்பட்டு, மீட்டெடுக்கப்பட்ட பிறகு அது மிக முழுமையாக சுற்றப்பட்டு பாதுகாக்கப் படுகிறது.
தானம் செய்யப்பட்ட தோல், தோல் வங்கிகளில் பாதுகாக்கப்படுகிறது என்பதோடு மேலும் அதனை ஐந்து ஆண்டுகள் வரை சேமிக்க முடியும்.
சென்னையில் உள்ள அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (KMC) மருத்துவ மனையில் முழு அளவிலாக இயங்கும் தோல் வங்கி உள்ளது.