TNPSC Thervupettagam

தோழி விடுதிகள் மற்றும் கடலோரப் புனரமைப்பு

February 1 , 2026 13 days 117 0
  • 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, தமிழ்நாட்டின் 'தோழி' பணி புரியும் பெண்களுக்கான விடுதிகளையும், தமிழ்நாடு கடலோரப் புனரமைப்புத் திட்டத்தையும் (TN-SHORE) மேற்கோள் காட்டியுள்ளது.
  • தோழி விடுதிகளானது, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகத்தால் அரசு-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் கீழ் நடத்தப்படுகின்றன.
  • தற்போது, ​​15 மாவட்டங்களில் உள்ள 19 தோழி விடுதிகள் சுமார் 1,824 பணிபுரியும் பெண்களுக்குப் பயனளிக்கின்றன என்பதோடு மேலும் ₹176.93 கோடி செலவில் 14 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
  • தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 1,069 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை உள்ளது என்பதோடு இது மண் அரிப்பு, புயல் அலைகள் மற்றும் கடல் மட்ட உயர்வால் பாதிக்கப் படக் கூடியது.
  • TN-SHORE என்பது கடலோரப் பல்லுயிர்ப் பெருக்கம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல் படுத்தப் படும் 1,675 கோடி மதிப்பிலான ஒரு திட்டமாகும்.
  • இந்தப் பொருளாதார ஆய்வில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் கிராமங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது; கடலூர் மாவட்டத்தில் உள்ள கில்லை கிராமம் தமிழ்நாட்டின் அத்தகைய முதல் கிராமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்