மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக த்வைட்ஸ் பனிப்பாறை வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் எச்சரித்துள்ளனர்.
த்வைட்ஸ் பனிப்பாறை என்பது மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள ஒரு பெரிய பனிப் பாறை ஆகும் என்பதோடுஇது பெரும்பாலும் "டூம்ஸ்டே பனிப்பாறை" என்று அழைக்கப் படுகிறது.
இது புளோரிடா மாகாணம் அல்லது கிரேட் பிரிட்டனின் அளவுள்ள அகலமான, வேகமாக நகரும் பனிப்பாறை ஆகும்.
உலகளாவிய அளவில் வருடாந்திர கடல் மட்ட உயர்வுக்கு பனிப்பாறை சுமார் 4% பங்களிக்கிறது.
இதன் சரிவு மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டியை சீர்குலைத்து, உலக கடல் மட்டங்களை கணிசமாக உயர்த்தக் கூடும்.