சென்னை தனது முதல் நகர அளவிலான உயிரியல் பல்வகைக் குறியீட்டுடன் ஒரு புதிய தரத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று சென்னை நகர உயிரியல் பல்வகைக் குறியீட்டை அறிமுகப்படுத்தினார்.
23 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தக் குறியீடு ஆனது, அந்த நகரம் அதன் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
18 குறிகாட்டிகளின் அடிப்படை மதிப்பீட்டில் சென்னை 72 மதிப்பெண்களில் 38 மதிப்பெண்களைப் பெற்றது.
அதன் பல்லுயிர்ப் பெருக்கத்தில் நகரம் 20 மதிப்பெண்களில் 12 மதிப்பெண்களைப் பெற்றது, ஆனால் சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளில் 16 மதிப்பெண்களில் 6 மதிப்பெண்களை மட்டுமே பெற்றது.
நிர்வாகம் மற்றும் மேலாண்மை பிரிவில் 36 மதிப்பெண்களில் 17 மதிப்பெண்களைப் பெற்றது என்பது இது திட்டமிடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தின் மிதமான அளவிலான ஒருங்கிணைப்பைக் காட்டுகிறது.
இந்தக் குறியீடானது ICLEI (வட்டார சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளுக்கான சர்வதேச சபை) மற்றும் தெற்காசியாவின் நிலைத்தன்மைக்கான உள்ளாட்சி அரசாங்கங்கள் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்டது.