இந்திய வாயு ஆணைய நிறுவனமானது, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் என்னுமிடத்திலுள்ள இயற்கை எரிவாயு அமைப்பில் ஹைட்ரஜனைக் கலப்பதற்கான ஒரு திட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாகத் தொடங்கியுள்ளது.
ஹைட்ரஜன் கலந்த இயற்கை வாயுவானது அவந்திகா வாயு நிறுவனத்திற்கு விநியோகிக்கப் படும்.
இந்திய வாயு ஆணைய நிறுவனமானது “தேசிய ஹைட்ரஜன் திட்டத்தின்” வரிசையின் கீழ் ”ஹைட்ரஜன் கலப்புத் திட்டத்தை” தொடங்கியது.
ஹைட்ரஜன் கலப்புத் திட்டமானது நகர வாயு விநியோகக் கட்டமைப்பில் ஹைட்ரஜன் கலப்பிற்கான ஒரு தொழில்நுட்ப-வணிக ரீதியிலான சாத்தியக் கூறுகளை நிறுவச் செய்வதற்கான ஒரு சோதனைத் திட்டமாக தொடங்கப் பட்டது.