"நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்ப அழுத்தம்: தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்டப் பகுதி மற்றும் பருவநிலை தொடர்புகளின் தசாப்த கால மதிப்பீடு" என்ற ஒரு தலைப்பிலான அறிக்கை தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது.
நகர்ப்புற விரிவாக்கம், காடழிப்பு மற்றும் மாறிவரும் நிலப் பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் அதிகரித்து வரும் வெப்பநிலையானது, மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை அதிகரித்து வரும் ஒரு ஆபத்தில் ஆழ்த்துகிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
சென்னை (2015 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 74% கட்டமைக்கப்பட்ட பரப்பளவைக் கொண்டது), கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொகுதிகள் குறிப்பிடத்தக்க நகர்ப்புற விரிவாக்கத்தைக் கண்டன.
பகுப்பாய்வு செய்யப்பட்ட 389 தொகுதிகளில், 94 தொகுதிகளின் வெப்பநிலையில் மிக கடுமையான நீண்டகால அதிகரிப்பு பதிவாகின, அதே நேரத்தில் 64 தற்போது தீவிர வெப்ப அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், சென்னை, கரூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகள் உட்பட 25 தொகுதிகள் இரண்டு வகைகளிலும் அடங்கும், இதனால் அவை தமிழ் நாட்டில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய இடங்களாக உள்ளன.
கொடைக்கானலில் 0.7°C மற்றும் திருத்தணியில் 1.2°C வரை உயர்வு பதிவாகியதுடன் உயரமான பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வெப்பமயமாதல் பதிவாகின.
2050 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு மாநிலமானது ஆண்டுதோறும் சுமார் 0.9°C முதல் 2.7°C வரையிலான காற்று வெப்பநிலை அதிகரிப்பை எதிர்கொள்ளக் கூடும்.