இந்தியாவில் ஒரு விரிவான நகர்ப்புறக் கொள்கையை அங்கீகரித்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
2023–24 மாநிலப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்ளூர் சுயாட்சித் துறை தயாரித்த வரைவுக் கொள்கைக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
டிசம்பர் 2023 இல் உருவாக்கப்பட்ட கேரள நகர்ப்புற கொள்கை ஆணையம், மார்ச் 2025 இல் தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.
இந்தக் கொள்கை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கு கேரளாவின் நகர்ப்புற வளர்ச்சிக்கு வழி காட்டும்.
இந்த ஆணையத்தின் கூற்றுப்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் கேரளாவின் சுமார் 80% நகர மயமாக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கொள்கை 10 தூண்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காக அரசு, தனியார் மற்றும் மக்களின் கூட்டாண்மையை ஊக்குவிக்கிறது.