நகரா கட்டிடக் கலை பாணியில் கட்டமைக்கப்பட்ட இராமர் கோவில்
January 25 , 2024 540 days 416 0
அயோத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள இராமர் கோவில் சமீபத்தில் திறக்கப்பட்டது.
சந்திரகாந்த் சோம்புரா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் ஆகியோர் நகரா கட்டிடக்கலை பாணியில் இந்தக் கோயிலை வடிவமைத்துள்ளனர்.
நகரா பாணி கோயில் கட்டிடக்கலை ஆனது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், குப்தர் காலத்தின் பிற்பகுதியில், வட இந்தியாவில் தோன்றியது.
நகரா பாணியிலான கோயில்கள் ஓர் உயரமான பீடத்தின் மீது கர்ப்பக் கிரகத்துடன் கூடிய (சன்னதி) வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
கர்ப்பக் கிரகத்தின் மேல் உயர்ந்து காணப்படும் ஷிகாரா ('மலை சிகரம்' எனப் பொருள் படும்) என்பது நகரா பாணிக் கோவில்களின் மிகவும் தனித்துவம் வாய்ந்த அம்சமாகும்.
ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள மிர்சாபூர் மற்றும் பன்சி-பாஹர்பூர் பகுதியில் உள்ள மலைகளில் இருந்து வரும் மணற்கற்களைப் பயன்படுத்தி இந்தக் கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் கட்டுமானத்தில் எஃகு அல்லது இரும்பின் பயன்பாடு தவிர்க்கப் பட்டு உள்ளது.
அதற்கு மாறாக, இது நாட்டின் உள்நாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப் பட்டுள்ளது.