'நகராட்சி திடக் கழிவு மற்றும் திரவக் கழிவுகளின் மறுசுழற்சி பொருளாதாரம்' பற்றிய அறிக்கை
May 22 , 2022 1172 days 666 0
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது, ‘நகராட்சி திடக் கழிவு மற்றும் திரவக் கழிவுகளின் மறுசுழற்சிப் பொருளாதாரம்’ என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் நகராட்சிக் கழிவுகளை அகற்றப் போராடி வரும் சமயத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் நகரங்களும் குப்பைக் கழிவுகளை நிரப்புவதற்கான புதிய நிலப்பரப்புத் தளங்களை உருவாக்க இயலாமல் உள்ளன.