நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம்
July 18 , 2023 890 days 445 0
முதன்முறையாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேயர்கள் உள்ளிட்ட தேர்ந்து எடுக்கப் பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மேயர்களுக்கு மாதம் 30,000 ரூபாயும், அதன் துணை மேயர்களுக்கு 15,000 ரூபாயும், மாநகராட்சி உறுப்பினர்களுக்கு மாதம் 10,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு 15,000 ரூபாயும், அதன் துணைத் தலைவர்களுக்கு 10,000 ரூபாயும், நகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாதமும் அவர்களது பதவிக் காலம் முழுமைக்கும் என்ற வகையில் பேரூராட்சித் தலைவர்களுக்கு 10,000 ரூபாயும், அதன் துணைத் தலைவர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கப் பட உள்ளது.