நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்கள் நிறைவேற்றம்
February 15 , 2021 1633 days 760 0
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறித்த சீர்திருத்தங்களை முழுவதும் வெற்றிகரமாக நிறைவேற்றிய இந்தியாவில் உள்ள 6வது மாநிலம் கோவா ஆகும்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்கள் ஆனது செலவினத் துறையினால் உருவாக்கப்பட்டதாகும்.
இது மாநிலங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தங்கள் தங்களது குடிமக்களுக்கு சிறந்த சுகாதாரம் மற்றும் துப்புரவு வசதியை ஏற்படுத்துவதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகின்றது.
இச்சீர்திருத்தங்களை மேற்கொண்ட இதர 5 மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், இராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகியவையாகும்.