நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்: 2023 ஆம் ஆண்டிற்கான ASICS அறிக்கை
October 23 , 2023 661 days 352 0
இந்தியாவின் நகர அமைப்புகளின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASICS) என்பது இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்படும் நகரங்களின் நிர்வாகத்தரம் பற்றிய ஒரு விரிவான மதிப்பீடாகும்.
இது ஐந்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது (கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது).
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது போல நகரங்களை வரிசைப் படுத்தச் செய்வதற்குப் பதிலாக இம்முறை மாநிலத்தை ஒரு தொகுதியாக கொண்டு மையப் படுத்தப் பட்டு இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
நகராட்சியின் செலவினங்களில் சுமார் 20% மட்டுமே சொத்து வரியால் ஈடு செய்யப் படுகிற நிலையில், இது வருவாயை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு செயல்திறன் நடவடிக்கைகளின் அவசியத்தைப் பரிந்துரைக்கிறது.
பொதுத் தளத்தில் அணுகக்கூடிய வகையில் நகர்ப்புறச் சட்டங்களானது 51% மாநிலங்கள் /ஒன்றியப் பிரதேசங்களில் காணப்படவில்லை.
அதன் செயல்பாடுகளில் நீண்டகாலத் தேவைகளுக்காக செயல்படுத்தும் முதன்மைத் திட்டங்களானது 39% அளவிற்கு இந்தியாவின் தலைநகர நகரங்களில் காணப்பட வில்லை.
கிழக்கு மாநிலங்களிலும் அதைத் தொடர்ந்து தெற்கு மாநிலங்களிலும் சிறந்த நகர்ப்புற சட்டங்களானது காணப்படுகின்றது.