நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மீதான N.S. விஸ்வநாதன் குழு
August 26 , 2021 1451 days 642 0
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான அமைப்பு குறித்தப் பரிந்துரைகளை வழங்கச் செய்வதற்காக N.S.விஸ்வநாதன் தலைமையிலான குழு ஒன்றினை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.
இக்குழுவானது, வைப்புத் தொகையின் அடிப்படையில் அவற்றின் அளவிற்கு ஏற்ப பல்வேறு மூலதன ஏற்றத் தாழ்வு விகிதம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைப் பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்டது.
குழுவின் பரிந்துரைகள்
நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளை 4 பிரிவுகளாகப் பிரிக்கலாம் என இக்குழு பரிந்துரைத்துள்ளது. அவை
பிரிவு I – ரூ. 100 கோடி வரை வைப்புத் தொகை உள்ளவை.
பிரிவு II – ரூ. 100 கோடி முதல் ரூ.1000 கோடி வரை வைப்புத் தொகை உள்ளவை.
பிரிவு III – ரூ. 1000 கோடி முதல் ரூ.10000 கோடி வரை வைப்புத் தொகை உள்ளவை.
பிரிவு IV – ரூ. 10000 கோடிக்கும் மேல் வைப்புத் தொகை உள்ளவை.
இந்தப் பிரிவுகளுக்கான இடர் உண்டாக்கும் சொத்துகளின் விகிதமானது 9% முதல் 15% வரையிலான வித்தியாசத்தில்இருக்கலாம் என இக்குழு பரிந்துரைக்கிறது.
IV ஆம் பிரிவு சார்ந்த நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கு Basel III விதிமுறைகளைப் பின்பற்றலாம்.
நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் வெவ்வேறு பிரிவுகளில் பெறப்படும் தங்க நகைக் கடன்கள், வீட்டுக்கடன் மற்றும் பத்திரம் வழங்கப்படாத கடன்களுக்கு வேண்டி தனித் தனி வரம்புகளை இக்குழு பரிந்துரைக்கிறது.
மேற்பார்வை நடவடிக்கையுடன் கூடிய ஒரு கட்டமைப்பானது இரு குறிகாட்டிகள் எனும் ஒரு அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
தற்போதுள்ள மூன்று குறிகாட்டிகள் அணுகுமுறைக்குப் பதிலாக நிகர வாராக்கடன் மற்றும் இடர் உண்டாக்கும் சொத்து விகிதம் ஆகியவை மூலம் அளவிடப்படும் சொத்துக்களின் தரம் மற்றும் மூலதனம் ஆகியவற்றை மட்டுமே இது கருத்தில் கொள்ள முடியும்.