நகர்ப்புற வளங்காப்பிற்கான ராம்சர் ஈரநில நகர அங்கீகாரம்
September 16 , 2025 6 days 50 0
2025 ஆம் ஆண்டில், ராம்சர் உடன்படிக்கையின் கீழ் உதய்ப்பூருக்கு ஈரநில நகர அங்கீகாரம் வழங்கப்பட்டது.
MoEFCC நடத்திய சுவச் வாயு சர்வேக்சன் விருதுகள் மற்றும் ஈர நில நகர அங்கீகார விழாவின் போது இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
நகர்ப்புறத் திட்டமிடலில் ஈரநிலப் பாதுகாப்பை ஒருங்கிணைத்ததற்கும், ஏரிப் பாதுகாப்பில் சமூகங்களை ஈடுபடுத்துவதற்கும் உதய்ப்பூர் இந்த அங்கீகாரத்தைப் பெற்றது.
ஈரநில வளங்காப்பு, பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரங்களில் சிறந்த முன்னெடுப்புகளைக் கொண்ட நகரங்களை ராம்சர் ஈரநில நகர அங்கீகாரம் கௌரவிக்கிறது.
'ஏரிகளின் நகரம்' என்று அழைக்கப்படும் உதய்ப்பூர், நிலையான ஈரநில மேலாண்மைக்காக அங்கீகரிக்கப்பட்ட நகரங்களின் உலகளாவியப் பட்டியலில் தற்போது இணைகிறது.