நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கான PCA கட்டமைப்பு
August 6 , 2024 374 days 311 0
இந்திய ரிசர்வ் வங்கியானது, முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகளுக்கு (UCB) விரைவுத் திருத்த நடவடிக்கை (PCA) கட்டமைப்பை வெளியிட்டுள்ளது.
மேற்பார்வையில் உள்ள வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் அதி தீவிரக் கண்காணிப்பு தேவைப்படும் பெரிய நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளில் அதிக கவனம் செலுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பலவீனமான UCB-களில் மேம்பாடுகளைக் கொண்டு வருவதற்கு வேண்டி ஆரம்பகால இடையீட்டுக் கருவியாக நிறுவப்பட்ட மேற்பார்வை நடவடிக்கை கட்டமைப்பிற்கு (SAF) மாற்றாக PCA கட்டமைப்பு கொண்டு வரப்பட உள்ளது.
அனைத்து உள்ளார்ந்த வழிகாட்டுதல்களின் (AID) கீழ் உள்ள UCB வங்கிகளைத் தவிர, அடுக்கு 2, அடுக்கு 3 மற்றும் அடுக்கு 4 வகைகளில் உள்ள இதர அனைத்து UCB வங்கிகளுக்கும் PCA கட்டமைப்பானது பொருந்தும்.