TNPSC Thervupettagam

நகர்ப்புறச் சவால்கள் நிதி

February 19 , 2026 4 days 59 0
  • 1 லட்சம் கோடி மத்திய உதவியுடன் நகர்ப்புறச் சவால்கள் நிதியை (UCF) தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நிதி முதன்முதலில் 2025–26 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது மற்றும் ஐந்து ஆண்டுகளில் 4 லட்சம் கோடி மொத்த முதலீட்டைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நிதியாண்டு (FY) 2025–26 முதல் நிதியாண்டு 2030–31 வரை செயல்படும் என்ற ஒரு நிலையில் மேலும் இது நிதியாண்டு 2033–34 வரை நீட்டிக்கப்படலாம்.
  • இந்தத் திட்டம் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள், அனைத்து மாநிலத் தலைநகரங்கள் மற்றும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கிய தொழில்துறை நகரங்களை உள்ளடக்கும்.
  • இது நகரங்களை வளர்ச்சி மையங்களாகவும், ஆக்கப்பூர்வமான மறுமேம்பாடு மற்றும் நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
  • இதன் திட்டச் செலவில் 25% என்ற அளவை மைய அரசு வழங்கும் என்பதோடு குறைந்த பட்சம் 50% சந்தை மூலங்களிலிருந்து திரட்டப்பட வேண்டும் என்ற நிலையில் மீதம் உள்ள 25% அளவை மாநிலங்கள் அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) பங்களிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்